அமைச்சரவை கூட்டம் நாளை இல்லை

0
119

அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலமை காரணமாக வாரந்த அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.

இந்நிலையில், அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையின் காரணமாக, அந்தக் கூட்டத்தை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இந்திய மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகர்கள் இன்று சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com