அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஒருவர் சு.கவில் இருந்து நியமனம்

0
26

அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஒருவர் சு.கவில் இருந்து நியமிக்க முடிவுசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மீன்வள அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த அமரவீர
மஹிந்த அமரவீர

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நல்லாட்சி அரசில் இருந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றார் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
நேற்றைய (நேற்றுமுன்தினம்) அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் பேசும் பொருளாக இருந்தது. ஜனாதிபதியும் இதற்கு கவலை வெளியிட்டிருந்தார். என்றாலும், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் தீர்த்துவைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள தேசிய அரசின் இருக்கட்சிகளும் உறுதிபூண வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இணை அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்படுவதால் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஏற்படும் சில கருத்து முரண்பாடுகள் தவிர்க்கப்படும். இதேவேளை, விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கியுள்ளனர். அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. முன்னாள் மஹிந்த அரசு அமையப்பெற்று ஒரு வருடத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments