அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சானியா – போபண்ணா இரண்டாம் சுற்றுக்கு தகுதி

0
25

அமெரிக்க ஓபன் டென்னிஸ்அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இடம்பெற்று வருகின்றது.

இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சுயாய் பெங் ஜோடி முதல் சுற்றில் குரோஷிய ஜோடியான பெட்ரா மாட்ரிக் மற்றும் டோனா வேகிக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அடுத்த சுற்றில் மிர்சா ஜோடி ஸ்லோவாக்கியா ஜோடியை எதிர்கொள்கிறது.

இதேவேளை, ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா மற்றும் பாப்லோ ஜோடி அமெரிக்க ஜோடியான பெரேட்லி க்ளான் , ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் போபண்ணா ஜோடி 1 க்கு 6, 6 க்கு 3 மற்றும் 6 க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்த சுற்றில் இந்த ஜோடி இத்தாலியின் சிமோன் போல்லி மற்றும் பபியோ ஃபோக்னி ஜோடியை எதிர்கொள்கிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com