அமெரிக்காவிடமிருந்து எஃப் – 15 ஜெட் ரக போர் விமானங்களை வாங்ககும் கத்தார்

0
31

அமெரிக்காவிடமிருந்து எஃப் – 15 ஜெட் ரக போர் விமானங்களை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது.


வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைவர் ஜிம் மேட்டிஸ் மற்றும் கத்தார் பாதுகாப்புத்துறை தலைவர் இடையே நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் பெரிய நட்பு நாடான கத்தார் மீது சில தினங்களுக்குமுன் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய அளவில் கத்தார் நிதியுதவி அளிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்கா – கத்தார் இடையிலான இந்த ஒப்பந்தம், வளைகுடா நாடுகள் கத்தாருக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் புறக்கணிப்பு நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.அமெரிக்காவிடமிருந்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments