பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை இம்முறை கொண்டாடமாட்டேன்- அமிதாப் பச்சன்

0
31

பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை இம்முறை கொண்டாடமாட்டேன்- அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

74 வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன், கடந்த 2010ஆம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார்.

திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை அவர் பதிவிட்டு வருகிறார்.

அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், பயணத்தில் இருக்க வேண்டியுள்ளதால் இந்த ஆண்டு எனது 75வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments