அமலாபாலின் பாஸ்கர் ஒரு ராஸ்கலா?

0
74

அமலாபாலின் பாஸ்கர் ஒரு ராஸ்கலா?

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

சித்திக் இயக்கத்தில் அமலாபால், அரவிந்த் சாமி இன்னும் பலர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

“பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தின் தமிழ் ரீமேக்கே “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” ஆகும்.

தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார் சித்திக்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

இந்த திரைப்படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்திலும், அமலாபாலின் கதாபாத்திரத்திலும் மலையாள வெர்ஷனை போல் இல்லாமல் சிறு மாற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படமானது அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ஆடியோ மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

“பாஸ்கர் ஒரு ரஸ்கல்” படத்தின் ரீ- ரெக்கார்டிங்க் வேலைகள் தற்போது மிக துரிதமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசையை நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதுடன், திரைப்படமானது டிசம்பர் மாதத்தில் திரையில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

இந்த திரைப்படத்தை எம்.ஹர்சினி தயாரித்துள்ளதுடன்,அம்ரேஷ் இசையமைத்துள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com