அன்று ஆவா குழுவை உருவாக்கியவர்களே இன்றும் பின்புலத்தில்

0
34

அன்று ஆவா குழுவை உருவாக்கியவர்களே இன்றும் பின்புலத்தில் உள்ளனர் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு காரணமாகவுள்ள ஆவா குழு முன்னாள் அரசின் காலத்திலேயே உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பின்புலமாக இருந்து யார் இயக்கியது என்று நாட்டடில் அனைவருக்கும் தெரியும். அன்று ஆவா குழுவுக்கு பணக்கொடுத்து இயக்கியவர்களே இன்று அதனை இயக்கி வருகின்றனர் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com