அனுமதிப்பத்திரமின்றி மணல்  ஏற்றிச் சென்ற இருவர் கைது

0
20

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு டிப்பர்களில் மணல் ஏற்றிச் சென்ற இருவரை நேற்று தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அனுமதிப்பத்திரமின்றி மணல்

கந்தளாய் மற்றும் ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 32,மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இரண்டு டிப்பர் வாகனங்களில் அல்லை கங்கைப் பகுதியிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் மணலை கொண்டு சென்ற போதே கந்தளாய் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி சோதனை மேற்கொண்ட போதே அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments