அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்களாதேஷ் நிதியுதவி

0
13

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா அம்மையாரின் வாக்குறுதிக்கமைய வழங்கிய நிதியுதவியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹம்துல்லா உரிய காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

தமது நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அயலிலுள்ள நட்பு நாடுகளுக்கு பங்களாதேஷ் வழங்கும் உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி, அது இருதரப்பு உறவுகளின் சிறப்பான பண்பாகுமென்று குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் அண்மைக்காலத்தில் முன்னேறியுள்ளதுடன், அந்த உறவுகளை அனைத்து துறைகளிலும் உயர்த்துவது பங்களாதேஷின் குறிக்கோளாகும் என்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments