அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – யாழ்.மாவட்ட செயலகத்தினால்

0
15

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ் மாவட்ட செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் மாத்தறை அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட

நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்ற மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் ரத்நாயக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கிய அனைவருக்கும் மாத்தறை மாவட்ட மக்களின் சார்பினில் நன்றியினை தெரிவித்தார்.

அரிசி,பால் மா, பிஸ்கட், பருப்பு, நூடில்ஸ் போன்ற உணவுப் பொருட்கள், குடிநீர், ஆடைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இவற்றுள் உள்ளடங்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments