அடையாளத்தை கனமாக்கிக் கொண்ட நடிகை

0
126
அடையாளத்தை கனமாக்கிக் கொண்ட நடிகை
அடையாளத்தை

நடிகர் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

அதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

அதுவும் சரியாக அமையாததால் கிடைத்த விளம்பரப்படங்கள் அனைத்திலும் நடித்தார்.

தற்போது அதுவும் இல்லாமல் போக, மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். வந்ததோடு தன் உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் குறைத்து மிகவும் இளமையாக மாறியுள்ளார்.

அதன்பிறகு, ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராஃபரை அணுகி கவர்ச்சியான, விதவிதமான போஸ்களில் படமெடுக்கச் சொல்லி, இங்கேயுள்ள அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் போட்டோ அனுப்பிக் கொண்டிருந்தார்.

தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அம்மணி. சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளார்.

இதில், முகம் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.