அடுத்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூடும் அரசமைப்புப் பேரவை

0
11

அடுத்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசமைப்புப் பேரவை கூடவுள்ளது.

புதிய அரசமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அரசமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்க அடுத்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசமைப்புச் பேரவை கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசமைப்புப் பேரவை பல சந்தர்ப்பங்களில் கூடி புதிய அரசமைப்பில் அதிகாரப் பங்கீடும், பொலிஸ் காணி அதிகாரங்கள் பகிர்தல், சட்டவாக்க அதிகாரத்தை பகிர்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து சில முடிவுகளும் எட்டப்பட்டிருந்தது.

என்றாலும், அண்மைய சில நாட்களாக அரசமைப்புப் பேரவையின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக எதிர்வரும் வாரம் 23, 24, 25ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக கூடி கட்சிகளின் இறுதி நிலைப்பாட்டை தீர்மானிக்கவுள்ளது.

இதுவரை தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உருமய, கூட்டு எதிரணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் புதிய அரசமைப்புத் தொடர்பில் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரம் இன்னமும் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments