அஞ்சல் சேவையாளர்கள் அவதானத்துக்கு! – விடுமுறைகள் இரத்து

0
19
Want create site? Find Free WordPress Themes and plugins.

அஞ்சல் திணைக்களத்தின் சகல சேவையாளர்களது விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவத்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தன.

முதன்மை அஞ்சல் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அஞ்சல் திணைக்கள நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரியும் அவர்கள் இந்த சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments