தொலைநோக்கு அறிக்கை – Vision Statement

Want create site? Find Free WordPress Themes and plugins.
உலகெங்கும் இணையத்தளங்கள் உள்ளன.
அதில் தமிழில் பல்சுவை இணையத்தளங்களில்லையென்றே கூறலாம். இலங்கையில், செய்தி இணையத்தளங்களைத்தாண்டி தமிழ் இணையத்தளங்கள் தங்களது எல்லையை விஸ்தரித்ததில்லை எனலாம். நம் இணையதளம் அந்த எல்லையை விஸ்தரிக்கவே உருவாக்கப்படுகிறது;தமிழில் பல்சுவை இணையத்தளமாக பரிணமிக்கப்போகிறது.
பெயரை போலவே பிரபஞ்சத்தின் அனைத்து செய்திகளையும் தமிழில் தருவதே எமது முதன்மை நோக்கமாகும்.

ஊடகம் எனும் போது, இனி எதிர்காலம் சமுக வலைத்தளங்கள் தான் என்ற நிலையில் தமிழ் மக்களின் சந்ததிகளுக்கு நம் பெருமையையும்  நம் பாரம்பரியத்தையும்  எதிர்கால வாழ்வுக்கு அத்தியாவசியமானதையும் அளிப்பதே எமது கடமையாகும்.

தமிழ் கற்று பிரயோஜனமில்லை, அவர்களுக்கான தொழில் சந்தையில்லை என்ற எண்ணம் தற்காலத்தில் அனைவருக்கும் உண்டு.
தமிழில் இணையத்தள சந்தையை உருவாக்குவதன் மூலம் தமிழில் சிந்தனைத்திறனை வெளிப்படுத்துபவர்களுக்கு  களமாக நம் இணையதளம் காணப்படும்.

மக்களிடம் இருந்து பெற்றதை மக்களுக்கே வழங்குதல் எம் கடமை. எங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை தமிழ் மக்களின் நலனுக்கும், கல்வி திட்டங்களுக்கும்,எதிர்கால வாழ்வுக்கு பயனளிக்கக்கூடிய நலத்திட்டங்கள் பலவும் நம்மால் முன்னெடுக்கப்படவுள்ளன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.